கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

🕔 October 29, 2016

– எப். முபாரக் –

ந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலும், அவை ஏற்படுத்தும் நாசங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில், கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு  பகுதியில் விவசாயி ஒருவரின் காணிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மற்றும் மா மரங்களை முறித்து நாசமாக்கியுள்ளன.

கந்தளாய் பிரதேசத்தில் நாளுக்குநாள் யானைகளின் தொடர்ச்சியான அட்டகாசம்  இடம்பெற்று வருவதாகவும், காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இப்பிரதேசத்தில் இரவு வேளைகளில் வெளியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இப்பிரதேச மக்களின் நலன் கருதி, யானைப் பாதுகாப்பு மின்சார வேலியினை அமைத்து தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் கந்தளாய் அக்போபுர பகுதியில் நான்கு வீடுகளை  யானைகள் சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்