பிள்ளையானுக்குப் பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே

🕔 October 19, 2016

pillayan-09விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் நொவம்பர் மாதம் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிள்ளையான், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் ராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல் ஆகியோர் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் எம். கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது மேற்படிஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்.

அதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்த ஏனைய மூன்று சந்தேகநபர்களிடமும் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னரே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்