தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

🕔 October 19, 2016

SEUSL - 01– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தில்’ கலந்து, பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக் கிழமை, கலை 9.00 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட வழிகாட்டல் பிரிவும் இணைந்து மேற்படி பயிற்சி நெறியை நடத்தியது.

பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். எஸ்.எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம். எம்.எம். நாஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி. வணிகசிங்க, ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட நிகழ்ச்சி முகாமையாளர் முஹம்மது முஸையின், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ. ஜெகதீஸன், இறக்காமம் பிரதேசசெயலாளர் எம். எம். எம். நஸீர், நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ். கரன், பொத்துவில் பிரதேசசெயலாளர் என்.எம். முஹம்மத் முஸர்ரத், சம்மாந்துறை பிரதேசசெயலாளர் ஏ. மன்சூர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ். ஜகராஜன் ஆகியோர் இந் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

மேற்படி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அம்பாறை மாவட்ட மாணவர்கள் 97 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்