கல்முனை பிராந்திய மின்வெட்டு நேரங்கள்

🕔 October 18, 2016

power-cut-01– எம்.வை. அமீர்

ல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுவதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் ஏ.ஆர்.எம். பர்ஹான் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம், ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் காலை 10.00 முதல் 11.00வரையும், மாலை 6.00 மணி முதல்  6.30 வரையும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேபோன்று,  மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, கொலனி மற்றும்  சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் மாலை 4.00 மணிமுதல்  5.00 வரையும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனக் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்