ஹக்கீமும், கைப்புள்ளயும்: வைரலாகப் பரவும் ‘மீம்’

🕔 September 4, 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் –

மூக வலைத்தளங்களில் ‘மீம்’ (Meme) கள், அதிகமானோரின் கவனத்தைப் பெற்ற ஒரு விடயமாக மாறி விட்டது.

‘மீம்’ என்றால் – ஒரு விவகாரத்தை படங்கைளப் போட்டுக் கலாய்ப்பது என்று, சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம்.

எத்தனை பெரிய உயரத்தில் இருப்பவர்களையும், ‘மீம்’ கள்  நையாண்டி பண்ணி, பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்து விடும்.

‘மீம்’களை உருவாக்குவதற்கு கொஞ்சம் கற்பனையும், ரசனையும் தேவையாக இருக்கின்றன.

சரி, விடயத்துக்கு வருவோம்.

கிண்ணியாவில், நேற்று சனிக்கிழமை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், துவிச்சக்கர வண்டியோட்டிய செய்தியொன்றினைப் படங்களுடன் ‘புதிது’ செய்தித் தளம் வெளியிட்டிருந்தது. இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வந்திருந்தன.

இந்தப் படத்தை வைத்து – தற்போது ‘மீம்’கள் உருவாகியுள்ளன. இவை தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

‘வின்னர்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு ‘கைப்புள்ள எனும் வேடத்தில் நடித்திருந்த காட்சியொன்றை, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் துவிச்சக்கர வண்டியோட்டும் படத்துடன் இணைத்து ‘மீம்’ செய்யப்பட்டுள்ளது.

‘வின்னர்’ திரைப்படத்தில் கைப்புள்ளயாக நடிக்கும் வடிவேலு, அந்தத் திரைப்படத்தில் கிரேன் மனோகரிடம்; “இன்னுமாடா இந்த ஒலகம் நம்மள நம்புது” என்று கேட்பதை, ஹக்கீமை வைத்து – ‘மீம்’ செய்யப்பட்டுள்ள படத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

அந்த ‘மீம்’ இதுதான்:

Hakeem - 08756

Comments

புதிது பேஸ்புக் பக்கம்