அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது

🕔 September 4, 2016

Azmi - 0123பொதுபலசேனாவை நம்பினாலும், அதாஉல்லாஹ்வை நம்பத் தயாரில்லை என்று மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கூறி இருக்கின்றமை தொடர்பில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனாவினுடைய உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக, சர்வதேச தரகர்களின் பக்கம் – முஸ்லிம்களின் பார்வை திரும்பியுள்ள இன்றைய காலகட்டத்தில், மேற்படி மாகாணசபை உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை என்றும் அஸ்மி கூறியுள்ளார்.

இதேவேளை, அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, முஸ்லிம்களை அடிமையாக்குகின்ற செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுத்திருக்கின்ற நிலையில், அந்த மாகாணசபை உறுப்பினர் சார்ந்த கட்சியும், பொதுபலசேனாவும் ஓரிடத்தில் இருந்தே உருவாக்கப்படுகிறது என்று மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் பொதுபலசேனாவை நம்பினாலும் அதாஉல்லாஹ்வை நம்பத்தயாரில்லை என, அந்த மாகாண சபை உருப்பினர் தெரிவித்திருக்கின்றமை தொடர்பில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

முஸ்லிம்களின் உண்மையான தலைமைகளை வீழ்த்துவதற்காக, நீங்கள் நம்பிய உங்கள் மறைமுக பங்குதார்களான பொதுபலசேனாவை, நீங்கள் உங்களின் எதிர்கால அரசியல் நலனுக்காக நம்பித்தான் ஆக வேண்டும்.

பொதுபலசேனாவின் பெயரை சொல்லி டயஸ்போராவின் திட்டத்துக்கு, முஸ்லிம்களை எவ்வேளையும்  பலியாக்கி விடலாம் என நினைப்பது குறித்து, முஸ்லிம் சமுகம் தீர்க்கதீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பித்தான் முஸ்லிம்கள் வாக்களித்தார்களே தவிர, ரணிலையோ ஹக்கீமையோ நம்பி  வாக்களிக்கவில்லை. ஏனென்றால், முஸ்லிம்களை பல தடவை –  தர்ம சங்கடமான நிலைக்கு ரணிலும், ஹக்கீமும் இட்டுச் சென்றுக்கின்றார்கள்.

அதாஉல்லாஹ்வின் கருத்துக்களிலுள்ள உண்மைகளை, இன்று கிழக்கு மக்கள் உணருகின்ற வேளையில், பொதுபலசேனா எனும் பெயரை மீண்டும் உச்சரிக்க முதலில் வெட்கப்பட வேண்டும்.

அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது.

பொதுபலசேனாவை நீங்கள் நம்பலாம். அதாஉல்லாஹ்வை மக்கள் இனி நம்புவார்கள்” என்றார்.

கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம், அண்மையில் வழங்கியிருந்த நேர்காணலொன்றில், “ஞானசார தேரர் முஸ்லிம்களைப் பாதுக்காக்கப் போகிறேன் என்றாலும் நம்பலாம்; அதாவுல்லா முஸ்லிம்களுக்காகப் பேசுகிறார் என்றால் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்