நிலவுக்குள் சில ரணங்கள் நூல் வெளியீடு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்

🕔 July 31, 2016

Bokk release - 0987
– அஷ்ரப் ஏ சமத் –

ல்லொலுவ மினுவான்கொடை வசீலா ஸாஹிர் எழுதிய நிலவுக்குள் சில ரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா  நேற்று சனிக்கிழமை மருதாணை அல் -ஹிதாய பாடசாலயின் கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா்  என்.எம் அமீன் தலைவா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அமைச்சா் றிசாத்பதியுத்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.

இதன்போது நுாலின் முதற்பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா்.

கவிஞர் கிண்னியா அமீா் அலி, வைத்தியா் தாஸீம் அஹமத், தினகரன் பத்திரிகை ஆலோசகா் எம். ஏ எம். நிலாம்,  கலைவாதி கலீல், மற்றும் இர்சாத் ஏ காதா் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினாா்கள்.

Comments