பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; செப்டம்பரில் தீர்ப்பு

🕔 July 14, 2016

Baratha laxman - 02முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது.

பராத லக்ஷ்மன் கொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணைகள், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் முறைப்பாட்டாளர்கள் சார்பில் 42 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 86 தடயப்பொருட்கள் மற்றும் 126 எழுத்து மூலமான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாராத லக்ஷ்மன் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேற்படி சம்பவத்தின்போது தலையில் சுடப்பட்ட நிலையில் – சூட்டுக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்