நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம்

🕔 July 14, 2016

Boy - 001ந்தோனியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை, நாளொன்றுக்கு 40 சிகரட் புகைப்பதாக, 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளியாகி ஊடகங்களில் பற்றி எரிந்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினைச் சேர்ந்த – அந்தக் குழுந்தையின் பெயர் ஆர்டி ரிசால்.

இரண்டு வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அந்தக் குழந்தை – சிகெரட் புகைப்பது குறித்து வெளியான போட்டோ உலகம் முழுவதும் பரவியது.

இது குறித்து அதிர்ச்சி அடைந்த இந்தோனேஷிய அரசாங்கம் , குழந்தைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதேவேளை, குழந்தை ஆர்டி ரிசாலுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக, சிறப்பு மறுவாழ்வு சிகிச்சை வழங்கத் துவங்கியது.

அந்தச் சிறுவனை தலைநகர் ஜகர்தாவுக்கு அனுப்பி, பல்வேறு பயிற்சிகளை வழங்கினர்.

இந்த நிலையில், புகைப்படிக்கும் பழக்கத்தில் இருந்து விடுதலையான மேற்படி குழந்தை, பின்னர் அதிகளவு உணவு உண்ணத் தொடங்கினார். அவரின் உடல் எடை அதிகரித்தது.

பின்னர், அதிலிருந்தும் தற்போது மீண்டுள்ள ஆர்டி ரிசால் எனும் அந்தக் குழுந்தை, இப்போது –  உடல் எடை குறைந்து அழகான சிறுவனாக உலாவருகிறார்.Boy - 002Boy - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்