Back to homepage

கட்டுரை

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும்

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும்

முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம் மீண்டும் உசாரடைந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் ஆட்சி அலகு வழங்கப்படுமாயின் முஸ்லிம்களுக்கென்றும் ஓர் ஆட்சியலகு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அவ்வாறானதொரு அலகுக்கு வைக்கப்பட்ட பொதுப் பெயர்தான் முஸ்லிம் தனி

மேலும்...
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

அரசியலை உணர்வுபூர்வமாக அணுகும் வாக்காளர்களைத்தான் அரசியல்வாதிகளில் அதிகமானோர் விரும்புகின்றனர். அறிவார்ந்த ரீதியில் அரசியலை விளங்கி வைத்துள்ள வாக்காளர்கள் ஆபத்தானவர்கள் என்பது கணிசமான அரசியல்வாதிகளின் எண்ணமாகும். ஆயுதப் போராட்ட இயங்கங்களின் பெரும்பாலான தலைமைகளும் இவ்வாறான மனநிலையில்தான் இருந்தன. இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இவ்வாறுதான் கட்டமைத்து வைக்கப்பட்டிருந்தனர். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டதைப் போல், முஸ்லிம்கள்

மேலும்...
கண் விடுத்தல்

கண் விடுத்தல்

முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து சமீப காலமாக திடீர் கோசமொன்று மேலெழத் துவங்கியுள்ளது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும் என்பதும், அந்த ஒற்றுமையின் மூலம் சமூகத்துக்கு நல்லவை ஏதாவது நடக்க வேண்டும் என்கிற அவாவும் கொண்டவர்கள், நீண்ட காலமாகவே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களுடையதும் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன திடீர்

மேலும்...
காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி

காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி

காற்று மாசடைவதன் காரணமாக, உலகம் முழுவதும் வருடாந்தம் சராசரியாக 55 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக வொஷிங்டனில் உள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க சங்கம் (AAAS) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து இந்தியா, சீனா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வொஷிங்டனில் உள்ள அறிவியல்

மேலும்...
அப்பன் குதிருக்குள் இல்லை

அப்பன் குதிருக்குள் இல்லை

இலங்கையில் கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத்

மேலும்...
அறுவடைக் காலம்

அறுவடைக் காலம்

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோசித ராஜபக்ஷ – சிறைச்சாலை வாகனத்தில்

மேலும்...
வேட்டை ஆரம்பம்:  மஹிந்தவை சூழும் அபாய மேகம்

வேட்டை ஆரம்பம்: மஹிந்தவை சூழும் அபாய மேகம்

Defusing momentum என்றொரு தந்திரம் உண்டு. வன்முறைகள் வெடிக்க கூடும் அல்லது எதிர் வினைகள் பலமாயிருக்கும் என்று அஞ்சும் சந்தர்ப்பங்களின் கையாளப்படும் ஒரு யுக்தியே இதுவாகும். முதலில், ஆரம்ப கட்ட நகர்வுகள் சிலதை பரீட்சார்த்தம் போல செய்து பார்ப்பார்கள். sense the pulse என்ற signal ஒழுங்காக கிடைக்குமிடத்து operation ஆரம்பிக்கும். அந்தத் தந்திரத்தினைத்தான் அரசு தற்போது

மேலும்...
ஒலுவில் பிரகடனம்: சிலரின் அரசியல் வாகனத்துக்கான எரிபொருள் ஆகிவிடக் கூடாது

ஒலுவில் பிரகடனம்: சிலரின் அரசியல் வாகனத்துக்கான எரிபொருள் ஆகிவிடக் கூடாது

– ஜெஸ்மி எம். மூஸா –ஒலுவில் பிரகடனம் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்தப் பிரகடனத்தின் நினைவலைகளை மீட்டிப் பார்க்கும் இத்தருணம் மகிழ்ச்சிக்குரியது.முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம் தலைமைகளை சிந்திக்க வைக்கும் உயர்ந்த நோக்கில் ஒலுவில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஒலுவில் தென்கிழக்குப்

மேலும்...
மு.கா.வின் முட்டைகள்

மு.கா.வின் முட்டைகள்

முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் அலுப்பூட்டும் வகையில் நீண்டு சென்றதால், ‘குஞ்சு’ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை கணிசமானோரிடம் உருவாகத் துவங்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், மு.காங்கிரசின்

மேலும்...
முன்னைய ஆட்சியின் கொலைகள்; துலங்கும் மர்மங்களும், திடுக்கிடும் தகவல்களும்

முன்னைய ஆட்சியின் கொலைகள்; துலங்கும் மர்மங்களும், திடுக்கிடும் தகவல்களும்

பிரகீத் எக்நேலியகொடவுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ராணுவத்தினருடன் மோதும் இந்த ஏ.எஸ்.பி ஷானி அபேசேகர யார்? குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஷானி அபேசேகர அந்த திணைக்களத்தில் இருக்கும் முதல் தர புலனாய்வு விசாரணையாளர். அவரது பெயர் நாட்டில் தற்போது பெரும்பாலும் பேசப்படும் பெயராக மாறியுள்ளது. பொலிஸ், ஊடகங்களில் மாத்திரமல்லாது அரசியல் மேடைகளிலும் இவர் பேசப்படும் நபராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்