Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு

வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு 0

🕔24.Jun 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, வில்பத்து காடழப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிக்கட்டி வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டார்கள்

மேலும்...
“நெருக்கடியான சூழலில், சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களை, நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யுங்கள்”

“நெருக்கடியான சூழலில், சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களை, நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யுங்கள்” 0

🕔23.Jun 2020

பயங்கரவாத நடவடிக்கையுடன் முஸ்லிம்களை வேண்டுமென்றே முடிச்சுப்போட்டு, தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதும் அதிகாரங்களை நிலைப்படுத்துவதுமே ஆளும் அரசியல்வாதிகள் சிலரின் திட்டமெனவும், பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் இந்த குரோத சக்திகளிடம் அறவே இருந்ததில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், கட்சியின்

மேலும்...
குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன்

குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன் 0

🕔22.Jun 2020

மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்பை

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் நடத்திய இன்சாப் இப்ராஹிம், எனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்: றிசாட் வாக்குமூலம்

ஈஸ்டர் தின தாக்குதல் நடத்திய இன்சாப் இப்ராஹிம், எனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்: றிசாட் வாக்குமூலம் 0

🕔20.Jun 2020

இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஞானசார தேரரின் மோசமான, பிழையான

மேலும்...
ஒரு சாரார் ஆதாயமடையும் விதமாக, பொதுத் தேர்தல் அமைந்து விடக் கூடாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

ஒரு சாரார் ஆதாயமடையும் விதமாக, பொதுத் தேர்தல் அமைந்து விடக் கூடாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔15.Jun 2020

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியாவில், நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே முன்னாள் அமைச்சர் இதனைக் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில்; “கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை

மேலும்...
றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை

றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை 0

🕔14.Jun 2020

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார நிலைமைகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா கொடுப்பனவாக 5000 ரூபா முதற்கட்டமாகவும், அதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு

கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு 0

🕔14.May 2020

கொவிட் – 19 (கொரோனாா) வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உட்பட – அக்கட்சியின் தவிசாளர்

மேலும்...
வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம்

வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம் 0

🕔9.May 2020

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட முறையாக குறிப்பிட்டு, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை கொரோனா தொற்று காரணமாக மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் தொடர்பில், வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப் பட வேண்டும்: றிசாட் பதியுதீன்

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் தொடர்பில், வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப் பட வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔2.May 2020

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அங்கு வாழும் பலர் தொழில்களை இழந்துள்ளனர். இன்னும்

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔29.Apr 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவர் – உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளதாகவும் அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித்

மேலும்...
றிசாட் பதியுதீனின் பெயரைக் களங்கப்படுத்தவே, எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ரியாஜ் பதியுதீன் மனைவி புகார்

றிசாட் பதியுதீனின் பெயரைக் களங்கப்படுத்தவே, எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ரியாஜ் பதியுதீன் மனைவி புகார் 0

🕔20.Apr 2020

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், ‘ஞாயிறு அருண’ மற்றும் ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கை முற்றிலும் தவறானதும் வெறுப்புணர்வை தூண்டக்கூடியது எனவும் ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அவர் அளித்துள்ள

மேலும்...
தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை

தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை 0

🕔19.Apr 2020

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாளர் அமைச்சர் றிசாட் பதியுதீன், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ‘கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் வழங்கினார்

முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔16.Apr 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். மன்னாரில் உள்ள காணி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே அவரது சகோதரர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். றிசாட் பதியுதீனின் மற்றொரு சகோதரரும் வடக்கு

மேலும்...
எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன் 0

🕔15.Apr 2020

– முன்ஸிப் அஹமட் – தனது சகோதரர் றியாஜ் பதியுதீன் அநியாயமாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, தானோ தனது குடும்பத்தினரோஅல்லது சகோரர்களோ ஈஸ்டர் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் என்பதை உறுதியாக நான் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் ஊடாக

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் கைது 0

🕔14.Apr 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று செவ்வாய்கிழமை மாலை கைது செய்துள்ளனர். புத்தளத்தில் வைத்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்