இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபாய் தாண்டியது

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபாய் தாண்டியது 0

🕔8.Apr 2020

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 200 ரூபா 46 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா பரவுகைப் பின்னரே இந்த வீழ்ச்சி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தேர்தல் பிரச்சினையைத் தீர்க்க சட்டத்தில் இடமுள்ளது; அவசியக் கோட்பாடு தேவையில்லை: சுமந்திரன்

தேர்தல் பிரச்சினையைத் தீர்க்க சட்டத்தில் இடமுள்ளது; அவசியக் கோட்பாடு தேவையில்லை: சுமந்திரன் 0

🕔8.Apr 2020

நாட்டில் தேர்தல் உட்பட சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியலமைப்பில் தேவையான ஏற்பாடுகள் இருப்பதனால் அவசியக் கோட்பாடு (Doctrine of necessity) பிரயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அவசர கோட்பாட்டு சட்டம் என்பது

மேலும்...
உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2020

உலக சுகாதார அமைப்பானது, சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு முறையாகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை

மேலும்...
ஆயுர்வேத மருத்துவமனைகளை ஊடரங்கு வேளையில் திறக்க அரசாங்கம் தீர்மானம்

ஆயுர்வேத மருத்துவமனைகளை ஊடரங்கு வேளையில் திறக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔7.Apr 2020

அனைத்து ஆயுர்வேத மருத்துவமனைகளையும் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நேரத்திலும் திறந்து வைப்பதென அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அத்தியவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரின் தலைமையில் அலறி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும்

மேலும்...
வதந்தி பரப்பியமைக்காக, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியானது

வதந்தி பரப்பியமைக்காக, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியானது 0

🕔7.Apr 2020

கொரோனாவை தொடர்புபடுத்தி பொய்யான தகவலைப் பரப்பிய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண், ‘சிறிலங்கா பரா டான்ஸ்போர்ட் அசோசியேசன்’ (Sri Lanka Para Dancesport Association) அமைப்பின் பொதுமக்கள் தொடர்பு இணைப்பாளர் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளம் ஊடாக திலினி மீவேவா எனும் 41 வயதுடைய மேற்படி பெண், இலங்கையின்

மேலும்...
நீங்கள் அணியும் முகக் கவசங்களால் என்ன பயன்:  உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன?

நீங்கள் அணியும் முகக் கவசங்களால் என்ன பயன்: உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன? 0

🕔7.Apr 2020

முகக் கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அடிக்கடி கைகளை கழுவ முடியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இடைவெளியை பேண முடியாதவர்களுக்கே கட்டாயமாக முகக்கவசங்கள் அவசியமாகின்றது என உலக சுகாதார அமைப்பின்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மருந்து கொடுக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச காட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மருந்து கொடுக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச காட்டம் 0

🕔7.Apr 2020

தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் செய்கிறது என்று தனக்கு தோன்றுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் பொருட்களை விநியோகிக்கும் போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தடுக்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதை சுட்டிக்காட்டி, விமல் வீரவன்ச மேற்படி கருத்தைக் கூறியுள்ளார். தேர்தல் ஆணைக்குழு

மேலும்...
தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம்

தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம் 0

🕔7.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்னுமொருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட 06வது மரணம் இதுவாகும். இவ்வாறு மரணித்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் இதுவரை 180 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக (செவ்வாய்கிழமை காலை

மேலும்...
நாவிதன்வெளி பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 46 பேர் விடுவிக்கப்பட்டனர்

நாவிதன்வெளி பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 46 பேர் விடுவிக்கப்பட்டனர் 0

🕔6.Apr 2020

– எம்.எம். ஜபீர் – நாவிதன்வெளி, சவளக்கடை, மத்தியமுகாம் பிரதேசங்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நிலையில் 14 நாட்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 46 பேர் இன்று திங்கட்கிழமை மருத்துவ சான்றிதழ் வழங்கி விடுவிக்கப்பட்டனர். கட்டார், டுபாய், சவூதி அரேபியா, இந்தியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் தொடக்கம் நாடு

மேலும்...
அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு

அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔6.Apr 2020

“கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ட்ரம்ப்; ‘நாம் நமது கண்ணுக்குத் தெரியாத எதிரி குறித்து அறிந்து வருகிறோம். அது கடினமானதாகவும்

மேலும்...
அரசாங்கத்துக்கும், சஜித் அணியினருக்கும் இடையில் சந்திப்பு; தமது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம்

அரசாங்கத்துக்கும், சஜித் அணியினருக்கும் இடையில் சந்திப்பு; தமது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் 0

🕔6.Apr 2020

அரசாங்கத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து இதன்போது ஆராயப்பட்டது. இதன்போது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா,

மேலும்...
கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல்

கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல் 0

🕔6.Apr 2020

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் போலி தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாதுவ பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மேற்படி பெண் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்

பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல் 0

🕔6.Apr 2020

நான்கு வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – நியூயார்க்கின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவிலுள்ள நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வன விலங்கு என்று கூறப்படுகிறது. லோவாவில் உள்ள தேசிய விலங்குகள் ஆராய்ச்சி மையம் நாடியா என்ற புலிக்கு கொரோனா பாதிப்பு

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக, இலங்கையர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மரணம்

கொரோனா தொற்று காரணமாக, இலங்கையர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மரணம் 0

🕔5.Apr 2020

இலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கொரோனா பாதிப்பு காரணமாக அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் மரணமடைந்துள்ளார். இவ்வாறு மரணமடைந்தவர் 52 வயதுடைய ஆண் என தெரியவருகிறது. இந்த நிலையில் நாட்டில் இதுவரை கொரோனாவினால் 171 பேர் பாதிக்கப்பட்டதாக (இன்று மாலை 06 மணி வரை) சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் செய்திகள் குறிப்பிடுகின்றன. நாட்டில் நோய்த் தொற்றுக்குள்ளான 05

மேலும்...
சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள்

சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள் 0

🕔5.Apr 2020

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் 100 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதவித் தொகைகள், நாளை திங்கள்கிழமை (06ஆம் திகதி) வழங்கி வைக்கப்படவுள்ளன. பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. அந்தந்தப் பகுதி கிராம சேவகர்கள் மூலமாக, பயனாளிகளின் வீடுகளில் வைத்து, இக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்படும். அதேவேளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்