யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔26.Mar 2020

வட மாகாணத்தின் – யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம், மதியம்

மேலும்...
மீன்களுக்கு அதிக விலை; மாளிகைக்காடு துறையில் பாரிய சனத்திரள்

மீன்களுக்கு அதிக விலை; மாளிகைக்காடு துறையில் பாரிய சனத்திரள் 0

🕔26.Mar 2020

– நூருல் ஹுதா உமர் – மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாமையால், அம்பாறை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகப்படியான விலைகளுக்கு மீன்களை விற்பனை செய்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. இதேவேளை, நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மீன்களை விநியோகிக்கும் மாளிகைக்காடு மீன்பிடித்துறையில், பாரிய வாகன நெரிசலும், சனத் திரளும் காணப்பட்டன. இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது 0

🕔26.Mar 2020

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 06 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவற்றுள் 03 முச்சக்கர வண்டிகளும்

மேலும்...
ஊரடங்குச் சட்டம்: 16 மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பகல் 12 மணிக்கு அமுலுக்கு வருகிறது

ஊரடங்குச் சட்டம்: 16 மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பகல் 12 மணிக்கு அமுலுக்கு வருகிறது 0

🕔25.Mar 2020

வட மாகாணம், மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பதிகளில் நாளை காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் நாளை மதியம் 12.00 மணிக்கு மீண்டும் அந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரும். அதேவேளை மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய

மேலும்...
கொரோனா: புதிய நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்படவில்லை; மேலும் பல புள்ளி விவரத் தகவல்கள்

கொரோனா: புதிய நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்படவில்லை; மேலும் பல புள்ளி விவரத் தகவல்கள் 0

🕔25.Mar 2020

– மப்றூக் – நாட்டில் இன்று புதன்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்றைய நிலைவரப்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளான மூவர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கடந்த 11ஆம் திகதி இலங்கையைச்

மேலும்...
மூச்சு விடுவதில் சிரமம்; கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர், வைத்தியசாலையில் அனுமதி

மூச்சு விடுவதில் சிரமம்; கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔25.Mar 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் – மூச்சு விடுவதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர், நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட இவர், அதன் பின்னர் கட்டாரில் இருந்து வருகை தந்த தனது உறவினர்களுடன் சில நாட்கள்

மேலும்...
தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒரு தொகையினர் இன்று வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்: ராணுவ தளபதி தெரிவிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒரு தொகையினர் இன்று வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்: ராணுவ தளபதி தெரிவிப்பு 0

🕔25.Mar 2020

கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 208 பேர் இன்று புதன்கிழமை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்று ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிசிச்சை பெற்றுவந்த சுமார் 313 பேர் வரையில் அவர்களின் வீடுகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படாத நபர்கள் தொடர்பில் இன்று

மேலும்...
கிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை

கிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை 0

🕔24.Mar 2020

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால், அவர்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை வழங்க, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்

மேலும்...
நகர மறுக்கும் இந்த நாட்களை அர்த்தமுடையவையாக்க, என்ன செய்யலாம்?

நகர மறுக்கும் இந்த நாட்களை அர்த்தமுடையவையாக்க, என்ன செய்யலாம்? 0

🕔24.Mar 2020

– இம்திஸா ஹஸன் – தொற்று வியாதியென்னும் பீதியால் மனிதன் தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்ளத் துடிக்கும் அதே நேரம், இச்சூழ்நிலையை அலட்சியமாகக் கருதும் சிலரும் எம்மிடையே இல்லாமலில்லை. எது எப்படி இருந்தாலும், வீட்டிலிருந்து எம்மையும் எம் சுகாதாரத்தையும் பாதுகாத்து இவ் வைரஸுக்கு விடைகொடுக்க வேண்டுமென்பதே இன்றைய உண்மையான தேவையும் தீர்வுமாகும். இதனடிப்படையில் எம்மையும்,

மேலும்...
கொரோனா தொற்று: நாட்டில் 100ஆவது நபர் அடையாளம் காணப்பட்டார்

கொரோனா தொற்று: நாட்டில் 100ஆவது நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔24.Mar 2020

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை (இன்று செய்வாய்கிழமை 03.03 மணி வரையில்) 100ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் இதே காலப்பகுதியில் 03 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இதேவேளை உலகளவில் இன்று மாலை 03.03 மணி வரையிலான

மேலும்...
மேல் மாகாண ஆளுநராக, விமானப் படையின் முன்னாள் தளபதி நியமனம்

மேல் மாகாண ஆளுநராக, விமானப் படையின் முன்னாள் தளபதி நியமனம் 0

🕔24.Mar 2020

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீஃப் மாஷல் ரொஷன் குணதிலக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, கடந்த வாரம் அவின் பதவியை ராஜினாமா செய்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக

மேலும்...
அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி

அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி 0

🕔24.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதொரு அனுபவத்தை நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம் மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன. ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை

மேலும்...
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் குணமானார்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் குணமானார் 0

🕔23.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி – முழுவதுமாக குணமடைந்து இன்று திங்கட்கிழமை காலை வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளது. அவருக்கு பரிசோதனைகள் பல செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்தியசாலைத் தரப்பு கூறுகிறது. மேற்படி நபர் குணமடைந்த போதிலும், இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பின்

மேலும்...
கொரோனா: ஒரே நாளில் 1600 மரணங்கள்; அதிர்கிறது உலகம்

கொரோனா: ஒரே நாளில் 1600 மரணங்கள்; அதிர்கிறது உலகம் 0

🕔23.Mar 2020

கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அவற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த தொற்றுகள், மரணங்கள் மற்றும் முந்தைய 24

மேலும்...
கல்முனை மாநகர சபை எல்லைப் பகுதிகளில், கட்டட நிர்மாண வேலைகளுக்கு, மறு அறிவித்தல் வரை தடை

கல்முனை மாநகர சபை எல்லைப் பகுதிகளில், கட்டட நிர்மாண வேலைகளுக்கு, மறு அறிவித்தல் வரை தடை 0

🕔22.Mar 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனைத்து கட்டட நிர்மாண வேலைகளையும் மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் உத்தரவிட்டுள்ளார். இவ்வுத்தரவை மீறி கட்டுமான வேலைகளை மேற்கொள்கின்ற வீட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்