Back to homepage

மேல் மாகாணம்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவு நடவடிக்கை  நிறைவு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவு நடவடிக்கை நிறைவு 0

🕔31.Oct 2020

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு அமைய அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகியது. அந்த ஆணைக்குழுவின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 09 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.

மேலும்...
கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔31.Oct 2020

கொரோனா தொற்றினால் பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை பலியாகியுள்ளார். இதன் காரணமாக நாட்டில் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இன்று காலை நிலைவரப்படி

மேலும்...
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது 0

🕔30.Oct 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியின் போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,105 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்திருந்தது. இவர்களில் 5,804 பேர் நோய்க்காண சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா தொற்று காரணமாக

மேலும்...
நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமர் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமர் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நியமனம் 0

🕔30.Oct 2020

நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று வியாழக்கியமை பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 05 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர்,

மேலும்...
வாழைச்சேனையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள், அரச அச்சகக் கூட்டுத்தான பயன்பாட்டுக்கு வழங்கி வைப்பு

வாழைச்சேனையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள், அரச அச்சகக் கூட்டுத்தான பயன்பாட்டுக்கு வழங்கி வைப்பு 0

🕔29.Oct 2020

– அஷ்ரப் ஏ சமத் – வாழைச்சேனை காகித ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி கடதாசியினை, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த கடதாசி தொகுதியை நேற்று வழங்கி வைத்தார். அரச அச்சக கூட்டுத்தபானம்

மேலும்...
இருபதுக்கு ஆதரவளித்த 09 பேருக்கு, நாடாளுமன்றில் ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

இருபதுக்கு ஆதரவளித்த 09 பேருக்கு, நாடாளுமன்றில் ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை 0

🕔29.Oct 2020

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்கட்சியியைச் சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபையில் – ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு, எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகருக்கு கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டயானா கமகே, அ. அரவிந்த குமார்,

மேலும்...
20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார் 0

🕔29.Oct 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை கையொப்பமிட்டுள்ளார். சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அவர் கையொப்பமிட்டதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இந்தவெல தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இன்று தொடக்கம், 20ஆவது திருத்தம் சட்டமாக மாறுகிறது. அரசாங்கம் முன்வைத்திருந்த 20ஆவது திருத்தச் சட்டமூலம், சில திருத்தங்கள்

மேலும்...
ராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து

ராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து 0

🕔28.Oct 2020

ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான பயணத் தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா மீதான பயணத் தடையானது அமெரிக்காவின் சட்ட செயன்முறையின் ஓர் அங்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சவேந்திர சில்வா மீது பயணத் தடை குறித்து ஊடகவியலளார்கள் இன்று

மேலும்...
பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி

பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி 0

🕔28.Oct 2020

முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர்

மேலும்...
இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு

இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு 0

🕔28.Oct 2020

அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சீனா வேறு நோக்குடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அமைச்சில் நடத்திய, கூட்டு ஊடக

மேலும்...
அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா

அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா 0

🕔27.Oct 2020

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கை வந்துள்ளார். ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில் சீனாவுக்கு

மேலும்...
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் முபாறக் மௌலவி மரணம்

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் முபாறக் மௌலவி மரணம் 0

🕔27.Oct 2020

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.எம். முபாறக் இன்று செவ்வாய்கிழமை வபாத்தானார். நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவர் – கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தார். அவருக்கு 71 வயதாகிறது. நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
கொரோனாவினால் மேலும் இருவர் மரணம்: பலியானோர் எண்ணிக்கை பத்தொன்பது

கொரோனாவினால் மேலும் இருவர் மரணம்: பலியானோர் எண்ணிக்கை பத்தொன்பது 0

🕔27.Oct 2020

கொரோனா காரணமாக நாட்டில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும்கொழும்பு – 02 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். 75 வயதுடைய பெண் காலில்

மேலும்...
கொரோனா; இன்றும் ஒருவர் பலி: மரண எண்ணிக்கை 17ஐ எட்டியது

கொரோனா; இன்றும் ஒருவர் பலி: மரண எண்ணிக்கை 17ஐ எட்டியது 0

🕔27.Oct 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்றைய தினமும் ஒருவர் மரணமடைந்துள்ளார். கோரோனா காரணமாக நாட்டில் பலியான 17ஆவது நபர் இவர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணமடைந்தவர் ஜா – எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவராவார். இவர் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினமும் கொரோனாவினால்

மேலும்...
றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனை நொவம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டு ஒன்றின் பொருட்டு கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்