அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவு நடவடிக்கை நிறைவு

🕔 October 31, 2020

ரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

இதற்கு அமைய அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அந்த ஆணைக்குழுவின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 09 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.

இந்த நிலையில், நொவம்பர் மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நொவம்பர் மாதம் 29ஆம் திகதி வரையில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

Comments