நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

🕔 October 30, 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியின் போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,105 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்திருந்தது.

இவர்களில் 5,804 பேர் நோய்க்காண சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா தொற்று காரணமாக மரணித்துள்ளனர்.

உலகளவில் 04 கோடியே 48 லட்சத்து 13,825 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 11 லட்சத்து 79 ஆயிரத்து 974 பேர் பலியாகியுள்ளனர்.

Comments