Back to homepage

பிரதான செய்திகள்

17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை

17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை 0

🕔18.May 2018

நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, மூன்று பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. கொழும்பு நவகம்புர பகுதியில் 2001ஆம் ஆண்டு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது. மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினைத் தொடர்ந்து, நபரொருவரை சந்தேக நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். நீண்ட

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை; பிரதேச சபை அசமந்தம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை; பிரதேச சபை அசமந்தம் 0

🕔18.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் சில மாட்டிறைச்சிக் கடைகளில், ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய இறைச்சி, 900 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், பிரதேச சபை தவிசாளருக்கும்  இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றினை அடுத்து, ஒரு

மேலும்...
சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு

சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு 0

🕔18.May 2018

பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்; “திகன அசம்பாவிதங்களின் போது,

மேலும்...
ஐ.தே.கட்சி மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

ஐ.தே.கட்சி மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ 0

🕔18.May 2018

ஐக்கிய தேசியக் கட்சியில் இடம்பெற்ற மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் உள்ள சிறுவர்கள் இல்லமொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதனைக் கூறினார். அண்மையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும், அந்தக்

மேலும்...
கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்

கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம் 0

🕔17.May 2018

– அஹமட் – கல்முனையிலுள்ள நகைக் கடையொன்றில் பொதுமகன் ஒருவர் கொள்வனவு செய்த நகை, கருமை நிறமாக மாறியமையினை அடுத்து, அதனை குறித்த கடைக்கு கொண்டு சென்ற கொள்வனவாளரிடம், அந்த நகையினை தாங்கள் விற்பனை செய்யவில்லை என்று கடைக்காரர்கள் பல்டியடித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நகையினை கொள்வனவு செய்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த என்.எம்.

மேலும்...
மேயரின் மலசலகூடத்துக்கு 57 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம்;  விளக்கம் சொன்னார் ரோசி சேனநாயக்க

மேயரின் மலசலகூடத்துக்கு 57 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம்; விளக்கம் சொன்னார் ரோசி சேனநாயக்க 0

🕔17.May 2018

கொழும்பு மாநகரசபை மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசலகூடம் 04 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அதைச் சீரமைப்பதற்காகவே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க 57 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து, ஜே.வி.பி.யின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வெளியிட்ட

மேலும்...
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் கல்விவிசாரா ஊழியர்கள், நோன்பு விடுமுறையை மோசடியாக அனுபவிக்க முயற்சி

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் கல்விவிசாரா ஊழியர்கள், நோன்பு விடுமுறையை மோசடியாக அனுபவிக்க முயற்சி 0

🕔17.May 2018

அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள், நோன்பு கால விடுமுறையில் உரியபடி கடமைக்கு வராமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது. நோன்பு விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் 15ஆம் திகதியிலிருந்து எதிர்வருகின்ற அடுத்த மாதம் 18ஆம் திகதி வரையில் மூடப்பட்டுள்ளது. இவ்விடுமுறை கல்விசார் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல்

நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல் 0

🕔17.May 2018

– எம்.எம். மின்ஹாஜ் – நாடு ஒரு வரு­டத்­துக்கு 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரி­வித்தார். கிரா­ம அபி­வி­ருத்­தியை கட்டியெழுப்பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றும், தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்ளதாகவும், விவசா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளதாகவும் அவர் கூறினார். விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு உலக வங்­கியின் ஒத்­து­ழைப்­புடன் உள்­நாட்டு

மேலும்...
பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம்

பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம் 0

🕔16.May 2018

ஐரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம் கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம், பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்த கண்டத்தையும் வெளியிடாமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார். அதேவேளை பலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர்

மேலும்...
எமது கருத்தை எதிர்த்து அறிக்கை விட்ட ஐவரும், உபவேந்தரின் மோசடிகளுக்குத் துணை போகின்றவர்கள்: தெ.கி. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

எமது கருத்தை எதிர்த்து அறிக்கை விட்ட ஐவரும், உபவேந்தரின் மோசடிகளுக்குத் துணை போகின்றவர்கள்: தெ.கி. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு 0

🕔16.May 2018

‘தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பு, தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரல்’ எனத் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்ட ஐந்து நபர்களும், உபவேந்தர் மேற்கொண்ட மோசடியான செயற்பாடுகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்று, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆசிரியர் சங்கத்தின் கடிதத் தலைப்பில் தலைவர் எம். அப்துல் ஜப்பார் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள

மேலும்...
மரணத்தைத் தடுப்பதற்காக, அதிசய பக்ரீரியாவை தனக்குள் செலுத்திக் கொண்ட ரஷ்ய விஞ்ஞானி; நடந்தது என்ன?

மரணத்தைத் தடுப்பதற்காக, அதிசய பக்ரீரியாவை தனக்குள் செலுத்திக் கொண்ட ரஷ்ய விஞ்ஞானி; நடந்தது என்ன? 0

🕔16.May 2018

“உங்க வயசு என்ன சார்?” “எனக்குப் போனவாரத்தோட 500 முடிஞ்சி 501 நடக்குது!!” இது கற்பனைதான் என்றாலும், இவ்வளவு ஆண்டுகள் மனிதனால் உயிர்வாழ்வது எக்காலத்திலும் சாத்தியமே அல்ல என்று யாராலும் சொல்ல முடியாது.சாகாவரம் பெற்ற மனிதர்களை நாம் ஃபேன்டசி கதைகளில் மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த கற்பனையை நிஜமாக்க எல்லா காலத்திலும் மனிதர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர்

மேலும்...
திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி; முற்றாக நாசம்

திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி; முற்றாக நாசம் 0

🕔16.May 2018

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியொன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் இன்று புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென  தீப்பிடித்தது. இதன்போது  சாரதியும் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு குழந்தையுடன் 05 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்தமையினால், எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர். முச்சக்கர

மேலும்...
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார் 0

🕔15.May 2018

எழுத்துச் சித்தர் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் (72 வயது) இன்று செவ்வாய்கிழமை காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘மெர்க்குரிப்பூக்கள்’ நாவல் மூலம் ஏராளமான வாசகர்களைக் ஈர்த்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். ‘தலையணைப்பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘இரும்பு குதிரைகள்’ என 274க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன்,

மேலும்...
இலங்கையர்கள் 400 பேருக்கு, நாளை இரட்டைக் குடியுரிமை

இலங்கையர்கள் 400 பேருக்கு, நாளை இரட்டைக் குடியுரிமை 0

🕔15.May 2018

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 400 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு நாளை புதன்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற உள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: ஐவரின் கையொப்பங்களுடன் அறிக்கை வெளியீடு

தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: ஐவரின் கையொப்பங்களுடன் அறிக்கை வெளியீடு 0

🕔14.May 2018

‘தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், அந்தச் சங்கத்தின்  ஒட்டுமொத்த அங்கத்தவர்களின் அபிப்பிராயம் அல்ல’ என, அந்தச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஐவர் கையொப்பமிட்டு ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்