ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி

🕔 May 11, 2016

Mithiripa sirisena - 096பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை பிரித்தானியா பயணமாகினர்.

நாளை வியாழக்கிழமை மேற்படி ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பினை ஏற்று அங்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானிய பிரதமருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார்.

பிரித்தானிய விஜயத்தினை அடுத்து, 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்குச் செல்லவுள்ளனர். இதன்போது  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரி பேச்சுவார்த்தை நடத்துவாரென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேஷில் நடைபெறவுள்ள கும்பமேளா கலாசார நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாகவும், தொடர்ந்து இந்தியாவின் சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரி, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள அநகாரிக தர்மபாலவின் உருவச் சிலையை திறந்துவைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்