சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

🕔 April 7, 2016

Government emplem - 098னுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி வரை, அனுமதிப் பத்திரமற்ற துப்பாக்கிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்க முடியாதவர்கள், பிரதேச அல்லது மாவட்ட செயலகங்களிலும் ஒப்படைக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான துப்பாக்கி குறித்து சரியான எண்ணிக்கை வெளிவராத போதும், சுமார் 50 ஆயிரம் வரையான சட்டவிரோத துப்பாக்கிகள் நாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில், அண்மைய காலமாக வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்