தலைப்புச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் மரணம்

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனெவிரத்ன, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

78 வயதான முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் புதன்கிழமை இரவு (11) காலமானார் என, சிறைச்சாலைகள் பேச்சாளர் சேனக பல்லெதென்ன கூறியுள்ளார்.

வெலிக்கட – மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுனில் செனவிரத்னவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கலல்கொட பகுதியைச் சேர்ந்த இவர், நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.