தலைப்புச் செய்திகள்

ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில், சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுடன் பேசப்போவதாக ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் பேசப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், “ஜனாதிபதி புட்டின் மற்றும் ஜனாதிபதி ஷி ஆகியோருடன் சந்திப்புகள் இருக்கும் என்று நினைக்கிறேன். அது சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார்.

மேலும், “நாங்கள் அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேசப்போகிறோம். ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம், அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஏனெனில் நாங்கள் அந்த நாட்டின் விநியோக வழிகளை முற்றிலுமாக முடக்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

ஈரானின் தரைவழி விநியோகப் பாதைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் ‘ஆபரேஷன் அயர்ன் கேட்’ (Operation Iron Gate) தற்போது நடைமுறையில் உள்ளதாக டிரம்ப் கூறினார்.

“இதன் பொருள், தரை வழியாக எந்தப் பொருளும் உள்ளே வர முடியாது. அதேபோல், கடல்வழி முற்றுகையின் காரணமாக, கடல் வழியாகவும் எதுவும் உள்ளே வர முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

1989-ல் நிறுவப்பட்ட APEC அமைப்பில் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 21 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் ஆண்டுதோறும் கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.