
நீண்ட – பெருந்துயரைத் தந்த யுத்தத்திலிருந்து விடுபட்ட போதிலும், அதன் வடுக்கள் இன்னும் மக்கள் வாழ்வில் மறையாமல் உள்ளன. அந்த வலிகளெல்லாம் மறைந்து – எல்லோர் வாழ்வும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாற வேண்டும் என, தனது தீபாளி வாழ்த்துச் செய்தியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பெருநாளை இலங்கையிலும் உலகெங்கிலும் கொண்டாடும் அன்புக்குரிய தமிழ், இந்து மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
”இருளை அகற்றி ஒளி பிறப்பதையும், தீமையை அழித்து நன்மையினைப் பெறுவதையும், அறியாமையை நீக்கி – அறிவு வளர்வதையும் குறிப்பதாக அமைந்த இந்த நாள், தமிழர் வாழ்விலும் அவற்றினைக் கொண்டுவர வேண்டும் பிரார்த்திக்கிறேன்.
நீண்ட – பெருந்துயரைத் தந்த யுத்தத்திலிருந்து விடுபட்ட போதிலும், அதன் வடுக்கள் இன்னும் மக்கள் வாழ்வில் மறையாமல் உள்ளன. அந்த வலிகளெல்லாம் மறைந்து – எல்லோர் வாழ்வும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாற வேண்டும்.
இன பேதங்களற்று, எல்லா சமூகங்களும் இணைந்து வாழும் – ஓர் இனிய காலம் நம் வாழ்வில் அமைய வேண்டும்.
இன்றைய நாளில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசம், உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என மீண்டும் பிராத்திக்கிறேன்.
இருள் அகன்று – நம் எல்லோர் மனங்களிலும் ஒளி நிறையட்டும்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.



