
– அப்துல் அஸீஸ் –
கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் – தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றமைக்காக, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் 2025/26 விருது வழங்கும் நிகழ்வில், மூன்றாமிடத்துக்கான இந்த விருது வழங்கப்பட்டது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (08) நடைபெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் , கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் (EASCCA) நிறுவனத்தின் சார்பாக, அதன் தவிசாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம். பௌஸ் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.பீ. அமீர் ஆகியோர் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த விருதானது – குறித்த நிறுவனத்தின் சிறந்த நிர்வாகம், வினைத்திறனான செயற்பாடுகள், குழு ஒத்துழைப்பு மற்றும் புற்றுநோயாளர்களுக்குத் தரமான பராமரிப்பை வழங்குவதில் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாகும்.



