தலைப்புச் செய்திகள்

லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நுகர்வோருக்குத் தடையின்றி எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யத் தவறியமைக்காக ‘லாக்ஃப்ஸ் கேஸ் நிறுவனத்திற்கு எதிராக, நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தொடர்ந்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட 86-வது அறிவுறுத்தலை மீறி, தடையற்ற எரிவாயு விநியோகத்தைப் பேணத் தவறியதாகக் குற்றம் சாட்டி, நேற்று (29) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தின் 5-வது நீதிமன்ற அறையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

‘லாக்ஃப்ஸ் கேஸ்’ நிறுவனத்திற்கு இந்த வழக்கு தொடர்பாக அழைப்பாணை விடுத்த நீதிமன்றம், அந்நிறுவனத்தைப் நொவம்பர் 11ஆம் திகதி – நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

குறித்த திகதியில், கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.