
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிடவல – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிடவலவிடம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (29) பிற்பகல் வழங்கினார்.
இந்த நியமனம் 2026 நொவம்பர் 02 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்திற்கு முன்னர் பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிடவல ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பௌதீக அறிவியல் பீடத்தின் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.



