
ஹெரோயின் 24 கிராம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, நபரொருவருக்கு கொழும்பு மேல் திமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணையின் முடிவில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
குறித்த நபர் 2022-ஆம் ஆண்டு கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 24 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தார்.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கமைய, அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



