
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 1,664 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், இவற்றில் 48 சிறுவர்களும் அடங்குவர் என – பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கான பொலிஸ் திணைக்கள செயல்திறன் அறிக்கையின்படி, 2023-இல் 573 கொலைகளும், 2024-இல் 555 கொலைகளும், 2025-இல் 536 கொலைகளும் பதிவாகியுள்ளன.
இந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மொத்த கொலலைச் சம்பவங்களில், சுமார் 93 சதவீத சம்பவங்களை பொலிஸார் கண்டறிந்து தீர்வு கண்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதே காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களில் 317 பெண்கள் அடங்குவர்.
அதன்படி, 2023-இல் 105 பெண்களும், 2024-இல் 104 பெண்களும், 2025-இல் 108 பெண்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மூன்று ஆண்டுகளில் 48 சிறுர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வருடாந்த செயல்திறன் அறிக்கைகளின்படி, 2023-இல் 16 குழந்தைகளும், 2024-இல் 20 குழந்தைகளும், 2025-இல் 12 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
2026-ஆம் ஆண்டிற்கான பொலிஸ் திணைக்கள செயல்திறன் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.



