தலைப்புச் செய்திகள்

சிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதி

ஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ – சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கு அவருக்குப் பல விசேட வைத்தியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சுமார் ஒரு வாரமாக உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வந்த சிரந்தி ராஜபக்ஷ, நேற்று (16) சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அவர் விமான நிலையத்தை அடைந்ததும், விமானத்தில் ஏறும் வாயிலுக்கு (boarding gate) அருகில் ஒரு அதிகாரி – அவரிடம் சென்று, நிதிக்குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினால் (FCID) பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை அவரிடம் வழங்கியதாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் என செய்திகள் கூறுகின்றன.

இதன்படி, செப்டம்பர் 24-ஆம் திகதி நிதிக்குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு சிரந்தி ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.