
காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு, இரண்டு பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்களை, பாசிச தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற துயர சம்பவம் நடந்து இன்றுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசலிலும் ஹுசைனியா பள்ளிவாசலிலும் – இஷா தொழுது கொண்டிருந்த பொதுமக்கள் மீது, ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 103 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.
03.08.1990ஆம் ஆண்டு மீரா ஜும்மா பள்ளிவாசலில் 78 பேரும், ஹுசைனியா பள்ளிவாசலில் 25 பெரும் பாசிசப் புலிகள் நடத்திய, அந்த நர வேட்டையில் கொல்லப்பட்டார்கள்.

தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் – கொடூரமாக கொல்லப்பட்ட அந்த சம்பவம் நடந்து, 36 வருடங்கள் கடந்துவிட்ட போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு, இதுவரை எந்தவித நியாயங்களும் கிடைக்கவில்லை.
காத்தான்குடி பள்ளிவாசல்களில் நடந்த அந்தக் கோரத் தாக்குதலில் காயமடைந்த பலர் – இன்னும் பல்வேறு விதமான உடல் இயலாமைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
காலம் கடந்து விட்டது என்பதற்காக, புலிகளின் அந்த ட் படுகொலையை மன்னிக்க முடியாது.
அந்தத் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட பாசிசப் புலிகளின் – அப்போதைய பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள்.
அவர்களிடம் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் நீதி அதுவாகத்தான் இருக்கும்.
இந்த அரசாங்கத்திலாவது அந்த நீதி கிடைக்க வேண்டும்


