
கொழும்புப் பிரதேச காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காணிப் பதிவாளர் ஒருவரை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கைது செய்தது.
சந்தேக நபர், பத்திரங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் இரண்டாம் பிரதிகளை வெளித் தரப்பினருக்கு வழங்கியதன் மூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவியதாகவும், சதித்திட்டம் தீட்டியதாகவும், சட்டப்பூர்வ உரிமையாளர்களுக்கு எதிராக சட்டவிரோதமாக காணிகளை மாற்றுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர், பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 51 வயதுடையவராவார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு இவ்வழக்கு குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


