
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கூற்றை வெளியிட்டதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்த குற்றத்திற்காக, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு – கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த ஒன்பது மாத சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்தது.
குறித்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்த பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

2016-ஆம் ஆண்டு கிருலப்பனையில் நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில், இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில், சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் கருத்துக்களை வெளியிட்டமைக்காக, பொலிசார் ஞானசார தேரர் மீது தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நீதவான் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனக் கண்டறிந்து ஒன்பது மாத சிறைத் தண்டனையை விதித்தது, அதனை தற்போது கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


