தலைப்புச் செய்திகள்

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 04 மாதங்களில் 25 அரச அதிகாரிகள் கைது

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில், 25 அரச அதிகாரிகளை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆனைக்குழு கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2026 ஜனவரி 01 முதல் 2026 ஏப்ரல் 30 வரையிலான தனது முன்னேற்ற அறிக்கையை ஆனைக்குழு வெளியிட்டுள்ளது,

இந்தக் காலகட்டத்தில் லஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில், 51 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், 14 பேர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த வழக்குகளின் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 1.9 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் ஆணைக் குழு கூறியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, லஞ்சம் தொடர்பான 3,349 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 314 லஞ்ச வழக்குகள் தற்போது நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.