
இந்த வருடம் ஜுன் 05ஆம் திகதிய தரவுகளின் படி நாடு முழுவதும் 36,168 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் மேல் மாகாணத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும் மாத்தறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு இதுவரை டெங்கு தொடர்பான 20 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் மூன்று குழந்தைகள் அடங்குவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாளை (08) தொடங்கி ஜூன் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் விசேட மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கவுள்ளனர்.
டெங்கு பரவல் அதிகமாக உள்ள 14 உயர் அபாய மாவட்டங்களிவுள்ள 72 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் (MOH) பிரிவுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


