
அம்பாறை மாவட்டம் – ஆலையடிவேம்பு பிரதேசத்தின் முதல் பெண் ஆசிரியை வே. சோதிமுத்து தனது 102ஆவது வயதில் நேற்று காலமானார்.
1945ஆம் ஆண்டு – இவர் ஆசிரியர் பணியில் இணைந்தார் எனத் தெரியவருகிறது.
சோதிமுத்துவுக்கு 09 பிள்ளைகள். அவர்களில் 07 பேர் பெண்கள், இருவர் ஆண்கள். 19 பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

அக்கரைப்பற்று ஆர்கேஎம் பாடசாலை தொடங்கப்பட்டபோது, அங்கு முதல் ஆசிரியராக இவர் பணியேற்றார்.
கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய இவரின் கணவர் ‘யூனியன் வேலுப்பிள்ளை’ என அழைக்கப்பட்டார். அவர் 2005ஆம் ஆண்டு காலமானார்.
சோதிமுத்து – அவரின் ஊரான ஆலையடிவேம்பின் – முதல் பெண் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.



