
தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தடைபட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் (தனியார்) நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு உள்ளிட்ட சுமார் 100 பகுதிகளுக்கு மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை இன்று (30) தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் (தனியார்) நிறுவனம் தற்காலிகமாகத் துண்டிக்க வேண்டிய நிலைவரம் ஏற்பட்டது.
வெசாக் பௌர்ணமி மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறையின் காரணமாக, மின்சாரத் தேவையில் ஏற்பட்ட கணிசமான சரிவினால் ஏற்பட்ட – அமைப்புச் சமநிலையின்மையின் விளைவாக இந்தத் துண்டிப்பு அவசியமானது.


