தலைப்புச் செய்திகள்

அமெரிக்க எண்ணெய்கப்பல் மீது, ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்

படம்: AI மூலம் கற்பனையாக உருவாக்கப்பட்டது

ஈரான் மற்றும் அமெரிக்கா பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க எண்ணெய் கப்பலொன்று, தனது ரேடார் அமைப்பை அணைத்துவிட்டு ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற போது, அதன் மீது – ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் பண்டர் அப்பாஸ் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதி மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தஸ்னிம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புக்களோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை எனவும் தஸ்னிம் மேலும் தெரிவித்துள்ளது.