தலைப்புச் செய்திகள்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி றிஸ்வான், பணியிலிருந்து இடைநிறுத்தம்

– பாறுக் ஷிஹான் –

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.சி. றிஸ்வான் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நீதிச் சேவை ஆணைக்குழு, இவரை – வெள்ளிக்கிழமை (22) முதல் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பான பக்ஸ் அறிவித்தல், அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

றிஸ்வானுக்கு எதிராக – பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அண்மையில் இடமாற்றப்பட்டிருந்தார்.

றிஸ்வானுக்கு எதிரான விசாரணைகளை – நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்த நிலையில், அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஏ.சி. றிஸ்வான் மருதமுனையைச் சேர்ந்தவராவார்.