தலைப்புச் செய்திகள்

அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளராக சஹ்துல் நஜீம் நியமனம்; றஹ்மதுல்லா ஓய்வு

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.சஹுதுல் நஜீம்எம்.எஸ். சஹ்துல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில், இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எம். றஹ்மதுல்லா நாளை மறுதினம் 23ஆம் திகதி ஓய்வுபெற்றுச் செல்கின்றமையை அடுத்து, புதிய பணிப்பாளராக நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டிலிருந்து அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரா றஹ்மதுல்லா கடமையாற்றி வந்துள்ளார்.

தற்போது அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நஜீம், 2022ஆம் ஆண்டிலிருந்து கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றினார்.