தலைப்புச் செய்திகள்

பெரும்பான்மையை நிரூபிப்பதில் தமிழக சட்டமன்றத்தில் விஜய் தரப்பு வெற்றி: 118 தேவையான நிலையில், 144ஐ பெற்றது

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நிலையில் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீது இன்று (13) உரையாற்றினர்.

இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் அரசாங்கத்துக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். திமுக வெளிநடப்பு செய்து விட்ட நிலையில், அவையில் இருந்தவர்களில் 22 பேர் எதிராக வாக்களித்தனர். 5 பேர் வாக்களிப்பிலிருந்து விலகி இருப்பதாகக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.