
ஹட்டனில் இன்று (29) நடந்த பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 70 வயது ஆண் என – பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஹட்டன் – தயாகம சாலையில் உள்ள படல்கல பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று செங்குத்தான சரிவில் கவிழ்ந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


