
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விசாரணைக் கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக, சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரையும், சிறைச்சாலை காவலாளி ஒருவரையும் பொரல்ல பொலிஸார் நேற்று (27) கைது செய்தனர்.
சிறைக்குள் இரண்டு கைதிகளுக்கும் ஒரு காவலாளிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைதிகளில் ஒருவரான, கொழும்பு 14, நவகம்புரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் உயிரிழந்தார்.
போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக – மரணமடைந்தவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், கொழும்பு பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


