தலைப்புச் செய்திகள்

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இப்போதைக்கு விரும்பவில்லை: ஈரான் தெரிவிப்பு

அமெரிக்கா – ஈரானுக்கு இடையில் இன்று (20) பாகிஸ்தானில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில் ஈரான் கலந்து கொள்ளாது என, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

”அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள, ஈரான் தற்போதைக்கு விரும்பவில்லை” என்று அவர் – ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணையைப் பொறுத்தவரை, அதை மூட ஈரான் முடிவு செய்துள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்காவுடனான ஆரம்ப ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரான் அதைத் திறக்க முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் பின்னர் இரண்டு காரணங்களுக்காக அந்த முடிவை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

முதலாவதாக, லெபனான் எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் தொடர்வது. இரண்டாவதாக, ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கர்கள் விதித்த முற்றுகை.

மேலும், நம்பிக்கையின்மை ரீதியில் அமெரிக்கா நடந்து கொண்டமைக்காக, அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்காவை விமர்சித்தார்.

இதேவேளை, அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், அதன் மூலம் பிராந்தியத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் பாதகமான விளைவுகள் ஏற்படாது என்று நம்புவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இன்று மேற்படி பேச்சுவார்தை நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.