
ஈரானின் துறைமுகங்களை இன்று (13) முற்றுகையிடப் போவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் துறைமுகங்களுக்குள் கப்பல்கள் நுழைவதும் – துறைமுகங்களிலிருந்து வெளியேறுவதும் இதன் மூலம் தடுக்கப்படும் என்றும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
ஆனாலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக – நாடு நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் அனுமதிக்கப்படும் என்றும் அமெரிக்க ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள ஈரான் புரட்சிகர காவல் படை; ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் எந்தவொரு ராணுவக் கப்பலும் போர்நிறுத்தத்தை மீறியதாகக் கருதப்படும் என்றும், அவற்றுக்கு எதிராக ‘கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் கூறியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் இந்த அறிவிப்பு காரணமாக, கச்சா எண்ணெய் விலை 01 பேரலுக்கு 08 சதவீதம் உயர்ந்து 104.24 டாலராக அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் வழியாக – ஈரான் தனது சொந்தக் கப்பல்களை தொடர்ந்து இயக்கி வரும் அதே வேளை, பிற நாடுகளின் கப்பல்களுக்கு – வரையறுக்கப்பட்ட அளவில் போக்குவரத்தை அனுமதித்து வருகிறது.
அமெரிக்கா இந்த முற்றுகையை அமுல்படுத்தத் தொடங்கினால் மோதல்கள் அங்கு வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


