தலைப்புச் செய்திகள்

147 வெளிநாட்டவரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவு

ணையவழி நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை இம்மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (03) சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

சிலாபம் நகரின் இரணவில பகுதியிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, ​​இன்று (03) காலை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 133 பேர் சீன நாட்டினர், 13 பேர் பங்களாதேஷ் நாட்டவர்கள், மற்றொருவர் வியட்நாம் நாட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.