
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் 2006-ஆம் ஆண்டு காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ‘பிள்ளையான்’ என அறியப்படும் – சிவனேசத்துரை சந்திரகாந்தனை விளக்க மறியலில் வைக்கமாறு, கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் ஒரு வருட காலம் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் – காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையன், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேற்படி காலகட்டத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
நீண்டகாலக் காவலுக்குப் பிறகு, அவர் நீண்ட தாடியுடன் புதிய தோற்றத்துடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2006-ஆம் ஆண்டு நடந்த மேற்படி உபவேந்தர் காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்வதால், சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை, பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்ட மா அதிபரின் கருத்துக்கள் பெறப்பட்டதன் பின்னர், இவ்வழக்கு குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதால், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


