தலைப்புச் செய்திகள்

வீரியத்துடன் சண்டையிடுமளவுக்கு ஈரானிடம் ஏவுகணைகள் உள்ளன: அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி

ஈரானின் ஆயுதக் கிடங்கிலுள்ள மூன்றில் ஒரு பங்கு ஏவுகணைகளை மட்டுமே அமெரிக்காவால் இதுவரை அழிக்க முடிந்துள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க உளவுத்துறைக்கு நெருக்கமான அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இன்னும் வீரியத்துடன் சண்டைடியிடும் அளவிற்கு ஈரான் வசம் திறன்மிக்க ஏவுகணைகள் கையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் ஏவுகணைகளை 99 சதவீதம் அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியமைக்க இது முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரானின் சக்தி வாய்ந்த ஏவுகணைகளே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.

ஏவுகணை நகரங்கள் என சொல்லப்படும் அளவிற்கு – ஈரான் நிலத்தடியில் ஆழமான சுரங்கங்களில் ஏவுகணைகளை பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சுரங்கங்களை கண்டறிந்து அழிப்பது அமெரிக்காவுக்கு கடும் சவாலானது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.