தலைப்புச் செய்திகள்

தங்கள் அணுசக்தி நிலையங்களைத் தாக்கினால், என்ன நடக்கும் என்று, அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் குறிவைக்கப்பட்டால், ஹோர்முஸ் நீர்வழிப்பாதை “முழுமையாக” மூடப்படும் என்றும், அணுசக்தி நிலையங்கள் மீண்டும் கட்டப்படும் வரை, ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்படாது என்றும் ஈரானின் புரட்சிகர காவல் படை ​​(ஐ.ஆர்.ஜி.சி) அறிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள், எரிசக்தி உள்கட்டமைப்பு, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை “விரிவாகக் குறிவைக்கப்படும்” என்றும், அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட பிராந்தியத்தில் உள்ள – இதே போன்ற நிறுவனங்கள் “முழுமையாக அழிக்கப்படும்” என்றும் ஐ.ஆர்.ஜி.சி குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள பிராந்திய நாடுகளில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்களும், முறையான இலக்குகளாக இருக்கும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்று, அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு 48 மணி நேர கால அவகாசம் வழங்கி எச்சரித்தமையை அடுத்து, ஈரான் இந்த பதில் எச்சரிக்கையை விடுத்துள்ளது.