
நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள, நாடாளுமன்ற அலுவல் குழு திட்டமிட்டுள்ளதாக அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும், இந்த திருத்தச் சட்டமூலம் – அதே நாளில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு இசைவானதானது என்றும், பிரிவு 121(1) இன் கீழ் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் எனவும், உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (07) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் – அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், விசேட பெரும்பான்மையுடனும், பொதுமக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு இதற்குத் தேவை என்றும் கூறி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், உச்ச நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
ஜனவரி 07ஆம் திகதி – நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமர்ப்பித்த இந்த சட்டமூலம், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும்.


