
31 வயதுடைய பெண் ஒருவர் – பெருமளவிலான போதைப்பொருட்களுடன் நேற்று (05) பொரலஸ்கமுவ பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், நிர்மலா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டு வளாகத்திற்குள் ஒரு தற்காலிக வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த நடவடிக்கையின் போது, சந்தேக நபரிடம் இருந்து 17 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றினர்.

இதேவேளை மேற்படி பெண் நான்கு பிடியாணையின் கீழ் தேடப்பட்டு வந்தவர் என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் – தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


