தலைப்புச் செய்திகள்

லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை

லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, மேற்கு லிபியாவில் கொல்லப்பட்டார். இதனை லிபிய அதிகாரிகள் மற்றும் குடும்பத்தவர்களும் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

லிபிய தலைநகர் திரிப்போலிக்கு தென்மேற்கே 136 கிமீ (85 மைல்) தொலைவில் உள்ள ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் – துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக் கொன்டுள்ளனர்.

தனது மறைந்த தந்தையின் ஆட்சியின் சாத்தியமான வாரிசாகக் கருதப்பட்ட 53 வயதான சைஃப் அல்-இஸ்லாம், கடாபி ஆட்சியைக் கவிழ்த்த 2011 எழுச்சிக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய அரசியல் நபராக இருந்து வருகிறார்.

லிபிய அதிகாரிகள் கொலை குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் கொலைக்கான நோக்கம் அல்லது சந்தேக நபர்கள் பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

திரிபோலியை எதிர்க்கட்சிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து – தப்பிச் செல்ல முயன்ற சைஃப் அல்-இஸ்லாம் கடாபி 2011 இல் கைது செய்யப்பட்டு ஜின்டானில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், பொது மன்னிப்பின் கீழ், 2017 இல் அவர் விடுவிக்கப்பட்டார்.